தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலையடிவாரத்தில் மூதாட்டி மர்மச் சாவு - old woman dead

நெல்லை: கடையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் மர்மமான முறையில் மூதாட்டி ஒருவர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PATTI

By

Published : Jun 2, 2019, 3:12 PM IST

கடையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்தில் கடனா, ராமநதி உள்ளிட்ட பல்வேறு அணைகட்டுகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் சிறுத்தை, கரடி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்துவருகின்றன.

தற்போது, கோடையில் தண்ணீர் ஆதாரங்கள் வறண்டுபோயுள்ள நிலையில், தண்ணீர் தேடி வனவிலங்குகள் மலையடிவாரங்களுக்கு வந்துசெல்கின்றன.

இந்நிலையில், ராமநதி அடிவாரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தங்கம்மாள் என்ற மூதாட்டி சுற்றித் திரிந்ததாக அப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை தங்கமாள் வழக்கமாக படுத்துறங்கும் இடத்தினருகே ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் காவல் துறையினருக்கும், வனத் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை, வனத் துறை அலுவலர்கள் மூதாட்டியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மூதாட்டியின் காயங்களுக்கு எந்த வனவிலங்குகளும் காரணமல்ல என வனத் துறையினரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், இரவு நேரங்களில் அவ்வழியாக சென்ற வாகனம் ஏதேனும் மோதி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details