தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அணுமின் நிலைய கழிவுகளை கூடங்குளத்தில் வைக்கக்கூடாது என ஆர்ப்பாட்டம்!' - அறிவித்த சுப.உதயகுமார்

அணுமின் நிலைய கழிவுகளை கூடங்குளத்தில் வைக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நெல்லையில் நடைபெறும் என அணுக்கழிவுகளுக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் நெல்லையில் பேட்டியளித்துள்ளார்.

விரைவில் நெல்லையில் மாபெரும் போராட்டம்
விரைவில் நெல்லையில் மாபெரும் போராட்டம்

By

Published : Jun 15, 2022, 7:55 PM IST

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம், கூடங்குளம் பகுதியை அணு உலைப் பூங்காவாக மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் மற்றும் அணுக்கழிவு மையம் கூடங்குளத்தில் அமைக்கக்கூடாது; அதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் மற்றும் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எந்த விதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துகட்சிக்கூட்டம் நெல்லை டவுன் பகுதியில் நடைபெற்றது.

இதில் பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் வரும் ஜூன் 27ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கூடங்குளம் போராட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 63 வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டி அனைத்து கட்சிகள் சார்பாக மனு அளிக்கும் போராட்டம் மற்றும் ஜூலை 12ஆம் தேதி திருநெல்வேலி மாநகரப் பகுதியில் அனைத்து அரசியல் கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அணு உலைப் பூங்கா மற்றும் அணு கழிவுக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு ஆர்ப்பாட்டம், பரப்புரை உள்ளிட்ட இயக்கங்கள் நடத்தப்படும் எனவும்; தற்போது முதலமைச்சர், பிரதமரை சந்திக்கும்போது அணுக்கழிவு விஷயத்தில் மக்கள் சார்பாக பேசியிருக்கிறார் இது வரவேற்கத்தக்கது; மகிழ்ச்சி தரக்கூடியது இந்த நிலையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கடைபிடிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தெரிவித்தார்.

”அணுமின் நிலைய கழிவுகளை கூடங்குளத்தில் வைக்கக் கூடாது” விரைவில் நெல்லையில் மாபெரும் போராட்டம்!

இதையும் படிங்க:முடிவுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்: கடலுக்குச் சென்ற மீனவர்கள்

ABOUT THE AUTHOR

...view details