திருநெல்வேலி: மானூர் காவல் நிலையத்தின் புதிய கட்டடத்தை நேற்று (டிசம்பர் 30) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த கட்டடத்தை பயன்பாடுக்காக திறப்பதற்காக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நேற்று (டிசம்பர் 30) வந்திருந்தார்.
திருநெல்வேலியில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் மனைவியை வைத்து காவல் நிலையம் திறப்பு
திருநெல்வேலியில் புதிதாக கட்டபட்ட காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அந்த காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த உதவி ஆயவாளரின் மனைவியை திறக்க வைத்தார்.
அப்போது அதே காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றி புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருந்து, உடல் நலக்குறைவால் மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வம் என்பவரின் மனைவி மல்லிகா என்பவரை வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், அவரின் மூலம் ரிப்பன் வெட்டி காவல் நிலையத்தை திறந்து வைத்தார். அதன்பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் குத்து விளக்கேற்றி வைத்து காவல் நிலைய சுற்றுபுறங்களை பார்வையிட்டு காவல் துறையினருக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
இதையும் படிங்க:வாகனவோட்டிகள் கவனம்: 2 பைக்குகளுக்கு மேல் வரிசையாக செல்லக்கூடாது