தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்கள் சிரமமின்றி காவல் நிலையங்களுக்கு சென்று புகார் அளிக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

திருநெல்வேலி: பெண்கள் சிரமமின்றி காவல் நிலையங்களுக்கு சென்று புகார் அளிக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் பதிலளித்தார்.

Tirunelveli police
Arjun Saravanan

By

Published : Dec 24, 2020, 8:35 PM IST

நாட்டில் தொழில் நுட்ப வளர்ச்சியின் பங்கு அனைத்து துறைகளிலும் பிரதிபலிக்கிறது. அந்தவகையில் காவல் துறையிலும் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கவும் பல்வேறு நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும் தற்போது வரை பெண்கள் தங்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை காவல் நிலையத்தில் சென்று முறையிட இன்று வரை ஒருவித தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண காவல்துறையும் தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் திருநெல்வேலி மாநகரில் பெண்கள் புகார் அளிப்பதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஈடிவி பாரத் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் 8 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை என அனைத்து பிரச்னைகளையும் வீட்டிலிருந்தபடியே தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக www.tnpolice.govt.in என்ற இணையதளம் மூலமாகவோ 74491 00100 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம். இதனால் தங்களுக்கு எதிரான குற்றங்களை தெரிவிப்பதில் பெண்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜூன் சரவணன்

இதுகுறித்து பேசிய அவர், “பெண்கள் தங்கள் பிரச்சினை குறித்து புகார்அளித்தால் தொடர்ந்து மூன்று மாதங்களாக அந்த புகார் குறித்த விவரங்கள் கண்காணிக்கப்படுகிறது.

அதன்படி சம்பந்தப்பட்ட பெண்ணின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரின் தற்போதைய நிலை குறித்து காவலர்கள் விளக்கம் அளிப்பார்கள்.

குறிப்பாக இந்தக் கரோனோ காலத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வழக்குகள் குறித்து கண்காணிக்கப்பட்டது.

பின்னர் அனைவரையும் தொலைபேசியில் அழைத்து அவர்களின் புகார் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் குடும்ப வன்முறை புகார் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புகார் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் எதற்கும் அஞ்சாமல் எப்போதும் துணிவுடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:#MeToo: 'ரமணியை ஹோட்டலில் சந்திக்கவில்லை'- எம்ஜே அக்பர்

ABOUT THE AUTHOR

...view details