நெல்லை மாவட்டம், தருவை அடுத்த அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து ஏற்பட்ட விபத்தில் 6 தொழிலாளர்கள் மாட்டிக் கொண்ட நிலையில் முருகன், விஜய் ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வம் என்ற மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், சிறிதுநேரத்தில் சிகிச்சைப் பலன் இல்லாமல் இறந்துவிட்டார்.
தொடர்ந்து மீதமுள்ள ராஜேந்திரன், செல்வகுமார் மற்றும் மற்றொரு நபரான முருகன் ஆகிய 3 பேரை மீட்கும் பணிகள் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரால் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விபத்து நடைபெற்ற கல்குவாரியில் சுற்றுப்புறம் உள்ள பாறைகள் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு, கற்கள் கீழே விழுவதால், மீட்புப்பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. மீதமுள்ள மூன்று பேரில் ஒருவரது உடலை மட்டும் மீட்புக்குழுவினர் அடையாளம் கண்டனர்.