தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை கல்குவாரி விபத்து வழக்கில் குவாரி  உரிமையாளர் ஜாமீன் மனு தள்ளுபடி - quarry accident case

நெல்லை கல்குவாரி விபத்து வழக்கில் குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரது ஜாமீன் மனு நிராகரிகப்பட்டுள்ளது

குவாரி அதிபரின் ஜாமின் மனு தள்ளுபடி
குவாரி அதிபரின் ஜாமின் மனு தள்ளுபடி

By

Published : Jun 4, 2022, 9:10 AM IST

திருநெல்வேலி: முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடை மிதிப்பான் குளம் கிராமம் திசையன்விளையை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமாக இயங்கி வரும் கல் குவாரியில் கடந்த மே 14ஆம் தேதி பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ், அவரது மகன் உள்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனிடையே அவர்கள் 4 பேரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

நேற்றுடன் நீதி மன்ற காவல் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று (ஜூன் 4) 5ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜாமீன் மனுவை ரத்து செய்து, மேலும் 14 நாட்களுக்கு காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details