திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் கலந்துகொண்டார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரண்டு நாள், அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டிருந்தார். கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.