தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரின் உத்தரவின்படி நெல்லையில் அணைகள் திறப்பு! - நெல்லையில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் அணைகள் திறப்பு

நெல்லை: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் நெல்லையிலுள்ள கடையநல்லூர் கருப்பாநதி அணை, மேக்கரை அடவிநயினார் அணைகள் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளன.

nellai kadayanallur karuppanathi dam opening

By

Published : Aug 29, 2019, 1:59 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி விவசாய பாசனத்திற்காக நெல்லை மாவட்டத்திலுள்ள கருப்பாநதி, அடவிநயினார் அணைகளை உதவி பொறியாளர் ஆனந்த் புதன்கிழமை திறந்துவைத்தார்.

அதன்பின் பேசிய அவர், சுமார் 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையில் இருந்து நாளொன்றுக்கு பத்து கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி வரை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்றார்.

நெல்லையில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் அணைகள் திறப்பு

மேலும். சுமார் ஆயிரத்து 500 விவசாய ஏக்கர் நேரடியாகவும் ஏழாயிரத்து 500 விவசாய ஏக்கர் மறைமுகமாகவும் பயன்பெறும் என்றும் உதவி பொறியாளர் ஆனந்த் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details