தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரமாண்டமாக உருவான நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் - மாநகராட்சி ஆணையர் கூறுவது என்ன..? - today latest news

Nellai Junction Bus Stand: அண்டர் கிரவுன்ட் பார்க்கிங், அலங்கார வளைவு, பூங்கா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் 5 அடுக்கு மாடிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Nellai Junction Bus Stand
பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வரும் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் - மாநகராட்சி ஆணையர் கூறுவது என்ன

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 7:01 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,000 கோடி செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவை நோக்கி பல்வேறு இறுதிக்கட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மொத்தம் 4.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட சந்திப்பு பேருந்து நிலையம் மாநகரைச் சுற்றியுள்ள சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்த்த மக்கள் தொழில் ரீதியாக மாநகருக்கு வந்து செல்ல பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. அதேபோல் பள்ளி கல்லூரி மாணவர்களும் இப்பேருந்து நிலையத்தைச் சார்ந்துள்ளனர்.

ஆனால் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை திறக்கப்படாததால் நெல்லை மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பேருந்து நிலையம் கட்டுமான பணி நடைபெற்ற போது பூமிக்கு அடியில் டன் கணக்கில் ஆற்று மணல் அள்ளப்பட்டு முறைகேடாக விற்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்ததன் காரணமாகவே கட்டுமான பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்ற தடை விலகியதைத் தொடர்ந்து மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கட்டுமான பணியை மாநகராட்சி தீவிரப் படுத்தியது.

மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பூமிக்கு அடியில் கார் மற்றும் இருசக்கர வாகன பார்க்கிங் செய்ய ஒரு தளம், பேருந்துகள் நின்று செல்ல தரைதளம், அதற்கு மேல் கடைகள் செயல்படுவதற்கு 3 தளங்கள் என மொத்தம் 5 தளங்களுடன் சந்திப்பு பேருந்து நிலையம் பிரமாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

உயர் கோபுர மின்விளக்குகள், மேலே உள்ள கடைகளுக்குச் செல்ல 'லிப்ட்' வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் திரைகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாதாளச் சாக்கடை, மழை நீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் கட்டுமான பணிகளுக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த தகரச் சீட்டுகள் சமீபத்தில் அகற்றப்பட்டன.

தற்போது அலங்கார வளைவுகள், பிளாட்பார்மில் இருக்கைகள், முகப்பில் பூங்கா அமைப்பது போன்ற பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. கட்டிடத்தின் முகப்பு பகுதியில் நவீன அலங்கார சீட்டுகளைக் கொண்டு அலங்கரித்துள்ளனர். சமீபத்தில் நெல்லை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தை ஆய்வு செய்துவிட்டு விரைவில் திறக்கப்படும் என உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ரா கூறுகையில், "சந்திப்பு பேருந்து நிலையத்தைத் திறப்பதற்கான தேதி எதுவும் இறுதி செய்யவில்லை அதே சமயம் விரைவில் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:"சட்டப்பேரவை செயலர் பணி நீட்டிப்பை ரத்து செய்க" - தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம்!

ABOUT THE AUTHOR

...view details