திருநெல்வேலி:நெஞ்சுவலி ஏற்பட்ட 17 வயது சிறுமிக்கு பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை அளித்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் இந்திய அளவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தி உள்ளதாக மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் கூறுகையில், "தென்காசி மாவட்டம ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்தவர், ஜஸ்டின்துரை. இவருக்கு 5வதாக பிறந்த 17 வயது பெண் குழந்தை விநோதினி, 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், பள்ளியில் மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவருக்கு ரத்த அழுத்தம் அதிமாக இருந்துள்ளது. இது தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென தலைவலி, நெஞ்சுவலி மற்றும் பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 7ஆம் தேதி அன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும், நெஞ்சுவலி அதிகரித்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் இசிஜி எடுத்து பரிசோதித்து பார்த்துள்ளனர். அதில் வேறுபாடுகள் கண்டறியப்பட்ட உடன், இதயவில் துறைத் தலைவர் ரவிச்சந்திரன் எட்வின் தலைமையிலான மருத்துவர்கள் தலைமையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.