தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Southern Railway: வசூல் சாதனை படைத்த நெல்லை எக்ஸ்பிரஸ்.. 4 மாத வருவாய் எவ்வளவு தெரியுமா? - திருநெல்வேலி செய்திகள்

தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களில் நான்கே மாதங்களில் அதிக வருவாயாக ரூ.23 கோடியே 35 லட்சத்து 33 ஆயிரம் வருவாய் ஈட்டி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்(Nellai express) சாதனை படைத்துள்ளது.

தமிழகத்திலேயெ நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்தான்  முதலிடம்! எப்படி தெரியுமா?
தமிழகத்திலேயெ நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்தான் முதலிடம்! எப்படி தெரியுமா?

By

Published : Jun 8, 2023, 5:03 PM IST

திருநெல்வேலி:தமிழகத்திற்குள் இயக்கப்படும் ரயில்களில் அதிக வருவாய் தரக்குடிய ரயிலாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மாறி உள்ளது. கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான நான்கு மாதகாலத்தில் 3 லட்சத்து 32 ஆயிரம் பயணிகள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரு மார்க்கத்திலும் பயணம் செய்துள்ளனர். இதற்கான வருவாயாக 23 கோடியே 35 லட்சத்து 33 ஆயிரம் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது

தெற்கு ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையைத் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, எர்ணாகுளத்திலிருந்து (டெல்லி) நிசாமுதீன் செல்லும் மங்கள் தீப் எக்ஸ்பிரஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜனவரி 1-ஆதேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலான 4 மாத காலத்தில் மங்கள் தீப் எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 342 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதற்கான வருவாயாக 36 கோடியே 32 லட்சத்து 54 ஆயிரத்து 585 கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில் திருநெல்வேலியிலிருந்து சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ்(Nellai express) ரயில் 28வது இடத்தையும், சென்னையிலிருந்து மறுமார்க்கமாக புறப்படும் நெல்லை வரும் அதே நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் 29வது இடத்தையும் என அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

இரு மார்க்கங்களிலும் சேர்த்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு மாத காலங்களில் மட்டும் 3 லட்சத்து 32 ஆயிரத்து 884 பேர் பயணம் செய்துள்ள நிலையில் அதற்கான வருவாயாக 23 கோடியே 35 லட்சத்து 33 ஆயிரத்து 997 ரூபாய் கிடைத்துள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து தமிழகத்திற்குள் இயக்கப்படும் ரயில்களில் வருவாய் ஈட்டுவதில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 30-வது இடத்தை பிடித்துள்ளது. அந்த ரயிலில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 564 பேர் பயணம் செய்துள்ள நிலையில் அந்த ரயிலின் வருவாயாக 11 கோடியே 54 லட்சத்து 36 ஆயிரத்து 599 ரூபாய் கிடைத்துள்ளது. செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 34வது இடத்தில் உள்ளது.

அதேபோல் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 32வது இடத்தையும் மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 33வது இடத்தையும் பிடித்துள்ளது. குருவாயூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 45வது இடத்தையும் பிடித்துள்ளது.

சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் 46வது இடத்தையும் மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் 47வது இடத்தையும் பிடித்துள்ளது. அதே போல் மதுரையிலிருந்து சென்னைக்கு வரக்குடிய அதிவிரைவு சொகுசு ரயிலான தேஜஸ் ரயில் 49வது இடத்தை பிடித்துள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாத காலத்தில் 40 ஆயிரத்து 595 பயணிகள் மட்டும் பயணம் செய்த சென்னை நிசாமுதீன் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 11 கோடியே 21 லட்சத்து 63 ஆயிரத்து 218 ரூபாய் வருவாயாகக் கிடைத்துள்ளது. இந்த ரயிலில் குறைந்த அளவிலான பயணிகள் பயணம் செய்த நிலையிலும் 10 கோடிக்கு மேலான வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்திற்குள் இயக்கப்படும் ரயில்களில் அதிக வருவாய் தரக்குடிய ரயிலாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மாறி உள்ளது.

இதையும் படிங்க:Arikomban: நெல்லை வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானையை விட பொதுமக்கள் எதிர்ப்பு..!

ABOUT THE AUTHOR

...view details