தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு நாள்களில் அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது. விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது காவல் துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அந்த வகையில் நெல்லை மாநகர காவல் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்வுகளும், நடவடிக்கைகளும் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும் இந்தத் தொற்று நோயின் நிலைபுரியாத இளைஞர்கள் வெளியே சுற்றுவது, விளையாடச் செல்வது போன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.