நாங்குநேரி இடைத்தேர்தலில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் அதன் தலைவர் செல்லப்பாண்டியன் போட்டியிடவிருக்கிறார். இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 21ஆம் தேதியே தொடங்கிவிட்ட நிலையில், வருகின்ற வெள்ளிக்கிழமையன்று இவர் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார்.
டெபாசிட் தொகைக்காக மது பாட்டில்களை சேகரிக்கும் ‘வேட்பாளர்’!
நெல்லை: நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான டெபாசிட் பணத்தை செலுத்துவதற்காக குடிமகன்களால் வீசப்பட்ட காலி மது பாட்டில்களை வேட்பாளர் ஒருவர் சேகரித்துவருகிறார்.
அதற்கான வைப்புத் தொகையை திரட்டுவதற்காக நாங்குநேரி , அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காலி மது பாட்டில்களைச் சேகரித்துவருகிறார். அவ்வாறு சேகரிக்கப்படும் மது பாட்டில்களை பழைய இரும்புக் கடையில் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வேட்புமனுவை தாக்கல் செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் 65 விழுக்காட்டினர் மது குடிப்போர் இருக்கிறார்கள் என்றும், தங்களால்தான் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது என்று கூறும் செல்லப்பாண்டியன், மதுப் பிரியர்களைப் பாதுகாப்பதும் நாங்குநேரி தொகுதியில் மது ஆலைகளை அமைப்பதும்தான் தனது லட்சியம் என்றும் மார்தட்டிக்கொள்கிறார்.