தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்! - மணிமுத்தாறு,பாபநாசம், கடனா, சேர்வலாறு

நெல்லை: தொடர் மழை காரணமாக பல்வேறு அணைகளில் திறக்கப்பட்ட நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக குறுக்குத்துறை, மீனாட்சிபுரம் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நெல்லையில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்!
நெல்லையில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்!

By

Published : Jan 13, 2021, 4:58 PM IST

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாறு, பாபநாசம், கடனா, சேர்வலாறு உள்ளிட்ட பல்வேறு அணைகளிலிருந்து நேற்று பிற்பகல் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது.

இதன் காரணமாக நெல்லையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சாலைகள் துண்டிக்கப்பட்டன. இது ஒருபுறமிருக்க நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்தது. குறிப்பாக நெல்லை குறுக்குத்துறை, மீனாட்சிபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த வெள்ளத்தால் பொதுமக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் சாலையில் பரிதவித்து வருகின்றனர். அரசு சார்பில் இவர்களுக்காக சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும்கூட அங்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காத காரணத்தால் பெரும்பாலான மக்கள் முகாம்களுக்கும் செல்ல முடியாமல் தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாமல் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

நெல்லையில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்!

குறிப்பாக வீடுகளில் அத்தியாவசிய உடைமைகள் இருப்பதால் அவற்றை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தாண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாதது ஒருபுறம் இருந்தாலும் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நெல்லையில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழையால் அணைகளில் இருந்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றில் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வெள்ளத்திலிருந்து பொதுமக்களை சேதமில்லாமல் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details