திருநெல்வேலி: அரபிக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி உள்பட 4 தென் மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்கள் கொட்டித் தீர்த்த கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. திருநெல்வேலி மாநகரில் பல்வேறு இடங்களில் குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் இருந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் நகர் பகுதியில் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது.
குறிப்பாக, தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் சென்றதால் வண்ணாரப்பேட்டை, நெல்லை சந்திப்பு, திருநெல்வேலி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. இந்நிலையில், திருநெல்வேலி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சேர்மன் ஆறுமுகக்கனி தம்பதியின் மகன் அருணாச்சலம் (19) என்ற இளைஞர், கடந்த 17ஆம் தேதி தனது பைக்கில் என்ஜிஓபி காலனி வழியாகச் சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் உள்ள குளம் ஒன்று நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலை ஓரமாக இருந்த ஓடை முழுவதும் தண்ணீர் சென்றது தெரியாமல், அருணாச்சலம் அந்த ஓடைக்குள் வெள்ளத்தில் பைக் உடன் சென்றதில் சிக்கிக் கொண்டுள்ளார்.