‘அரசு விழாக்களில் சால்வை உள்ளிட்ட காதிப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்’ - thirunelveli
திருநெல்வேலி: அரசு விழாக்களில் சால்வை உள்ளிட்ட காதிப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய மக்களின் தயாரிப்புகளின் விற்பனையை பெருக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் செயல்படும் அனைத்து காதி கிராப்ட் விற்பனை நிலையங்களும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையம் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்து, விற்பனையைத் தொடங்கி வைத்தார்.