தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓண்டிவீரன் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை!

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் ஓண்டிவீரனின் சிலைக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மலர் தூவி மரியாதை செய்தார்.

minister-kkssr-ramachandran-pay-tribute-to-freedom-fighter-ondiveeran
ஓண்டிவீரன் சிலைக்கு வருவாய் துறை அமைச்சர் மரியாதை!

By

Published : Aug 20, 2021, 9:39 PM IST

நெல்லை:சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 250ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒண்டிவீரனின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள முழு உருவசிலைக்கு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், ஞானதிரவியம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்துல் வகாப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஓண்டிவீரன் சிலைக்கு வருவாய் துறை அமைச்சர் மரியாதை

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர், "ஒருங்கிணைந்த மாவட்டமான நெல்லையில் இருந்துதான் சுதந்திரப்போராட்ட வீரர்கள் உருவாகியுள்ளனர்.

வீரம் நிறைந்த மாவட்டம்தான் நெல்லை மாவட்டம். சுதந்திரப் போராட்ட வீரர்களில் வரலாறு மறைக்கப்படாமல் இருக்க வேண்டும் என எண்ணி பூலித்தேவன், வ.உ.சி., பாரதி, ஒண்டிவீரன் போன்றோருக்கு மணி மண்டபம் அமைத்தவர்தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

மேலும், அவர்களின் வரலாறு குறித்து தெரிந்து கொள்ள அரசு விழாவாக எடுத்து பெருமையும் சேர்த்தார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:வெள்ளையர்கள் உறங்கும் கல்லறை தோட்டம் மதுரையில்...

ABOUT THE AUTHOR

...view details