தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இப்படியே பேசிக்கொண்டிருந்தால் சீமான் தனிமைப்பட்டு போவார் - அமைச்சர் ஜெயக்குமார்

திருநெல்வேலி: ராஜிவ் காந்தி குறித்து கூறிய கருத்தினை சீமான் தவிர்த்திருக்கலாம் என்றும் இதனால் சீமான்தான் தனிமைப்பட்டு போவார் எனவும் நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரையின்போது அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

minister jeyakkumar

By

Published : Oct 15, 2019, 11:14 PM IST

Updated : Oct 16, 2019, 6:32 AM IST

அக்டோபர் 21ஆம் தேதி நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பரப்புரையின் போது மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சீமான் ஒரு சந்தர்ப்பவாதி

"வந்தாரை வாழவைப்பவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு அனைத்து மக்களும் வாழும் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. குறுகிய வட்டத்திற்குள் சீமான் பேசிவருகிறார். பேசி சீமான் ராஜிவ் காந்தி குறித்து கூறிய கருத்தினை தவிர்த்திருக்கலாம். ராஜிவ் காந்தி கொலை ஒரு துயரச் சம்பவம். பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்தச் சம்பவத்தை சீமான் கையில் எடுத்து இதுபோன்ற விஷமமான கருத்துகள் சொல்வதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இதனால் சீமான்தான் தனிமைப்பட்டு போவார். இது குறித்து அரசும் தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதே ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இதற்கு முன்பு அவர் எப்படி பேசியிருக்கிறார் என்பதை பாருங்கள். தற்போது அப்படியே மாற்றிப் பேசியுள்ளார் இது அவரது சந்தர்ப்பவாதத்தைக் காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

முன்னதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சீமானை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Oct 16, 2019, 6:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details