தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: கரோனா தடுப்பு விதிமுறைகளை மறந்த திமுகவினர்

கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

v
v

By

Published : Oct 1, 2021, 6:55 PM IST

திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்ல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஐந்து நாள்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை களைகட்டியுள்ளது. அந்த வகையில், திருநெல்வேலி மானூர் ஊராட்சி ஒன்றிய 22ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் முத்துமாரி என்பவர் போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து பாளையங்கோட்டை தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளருமான அப்துல் வகாப், முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் சுத்தமல்லி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தேர்தல் பரப்புரை

அப்போது பரப்புரையில், கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வகாப் உள்பட யாருமே முகக்கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. இதுபோன்று தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் திமுகவினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் - தீவிர பரப்புரையில் துரை வைகோ

ABOUT THE AUTHOR

...view details