திருநெல்வேலி:முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் பெளத்திரம், மூலம் போன்ற ஆசனவாய் தொடர்பான நோய்களுக்கு லேசர் முறையில் அறுவை சிகிச்சை செய்யும் நவீன இயந்திரம் தென்தமிழ்நாட்டில் முதன்முறையாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் இன்று (ஜூன் 30) அந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்த இயந்திரம் மூலம் அறுவை சிகிச்சை செய்தால் வலி இருக்காது. மேலும், மறுநாளே நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்வதுடன் ரத்த இழப்பு இருக்காது என முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட மருத்துவ இயந்திரம் பயன்படுத்தாமல் இருப்பதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக நேற்று நெல்லை வந்த சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியது குறித்து பத்ரிகையாளர்கள் கேட்டபோது, அந்தக் கருவிகள் பராமரிப்பில் தான் இருக்கிறது என்றார். மேலும் அவர், 'நெல்லையில் இன்று 48 கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் அதிகம் மாநகரைச் சார்ந்தவர்கள். ஆனால் நெல்லை அரசு மருத்துவமனையில் ஆறு பேர் மட்டுமே அட்மிஷனில் உள்ளனர். ஐசியூவில் யாரும் இல்லை. கரோனா விதிகளை கண்டிப்பாக கடைபிடித்தால் நோயைத் தடுக்கலாம். ஒமைக்ரான் போன்று தற்போது பரவும் வைரஸ் தீவிரமாக இல்லாமல் இருந்தால் நல்லது. தற்போது பரவி வரும் தொற்று குறைந்த தாக்கத்துடன் இருப்பதாகத் தான் தெரிகிறது.