திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறன. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் மத்திய மின் தொகுப்பு ஆணையத்திற்கு வழங்கப்பட்டு, அதன் மூலம் தமிழ்நாடு , கேரளா, ஆந்திரா தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 25 ஆம் தேதி இரண்டாவது அணு உலையில் பழுது ஏற்பட்டு, மூன்று தினங்களில் சரி செய்யப்பட்டு உடனடியாக மீண்டும் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.