திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டுவருகிறது. இதன் மூலம் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடந்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் இரண்டாவது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மின்சார உற்பத்தி திடீர் நிறுத்தம்! - Koodankulam Second Nuclear Reactor issue
திருநெல்வேலி: கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் பழுது காரணமாக மின்சார உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 465 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று தினங்களுக்குள் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின்சாரம் உற்பத்தி தொடங்கும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இரண்டாவது அணு உலையில் கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் தேதி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஜனவரி இரண்டாம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது அணு உலையில் பழுது காரணமாக மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.