தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்குவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு கரோனோ பரவல் காரணமாக விருது வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மூலம் எளிமையாக நடத்த அரசு உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெறும் 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா இன்று (செப்.07) வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் நெல்லையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அனைத்தையும் சேர்த்துதான் 285 பேர் இறந்துள்ளனர்.
ஆனால் சுகாதாரத் துறை வெளியிட்டு வரும் செய்தி அறிக்கையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகளின் இறப்பு மட்டுமே வெளியிடப்பட்டுவருகிறது. மற்றபடி மரணத்தை மறைக்கவில்லை.
மேலும் ஜூலை மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் பலி எண்ணிக்கை என்பது சுகாதாரத் துறை தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டுவருவது ஏற்புடையது அல்ல. ஏனென்றால் நெல்லை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை நாங்கள் சுகாதாரத் துறைக்குத் தெரிவித்துவிடுவோம். அவர்கள் அந்த உயிரிழப்பு தொடர்பான அறிக்கையை வெளியிடுவார்கள்" என்று தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் கரோனோ உயிரிழப்பு எண்ணிக்கை மறைக்கப்பட்டதா? தொடர்ந்து பேசிய அவர், "வருகிற அக்டோபர் மாதத்தில் அதிகமான பொதுமக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 1200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல் மற்ற தனியார் மருத்துவமனைகளில் 750 படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:மயிலாடுதுறையில் 200 மரக்கன்றுகள் நட்ட சமூக ஆர்வலர்கள்!