தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் குடிநீர் தட்டுப்பாடு: மின் மோட்டார்களை சீரமைக்கும் பணி தீவிரம் - தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, வெள்ளத்தால் சேதமடைந்த உறை கிணறுகள், மின் மோட்டார்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மின் மோட்டார்களை சீரமைக்கும் பணி
மின் மோட்டார்களை சீரமைக்கும் பணி

By

Published : Jan 23, 2021, 1:07 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் உறை கிணறுகள், மின் மோட்டார்கள் கடுமையாக சேதமடைந்தன.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆறு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் நிலையில், ஆற்றுப்படுக்கையில் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் 46 உறை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், கடந்த வாரம் பெய்த தொடர் கனமழை காரணமாக கிணறுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் மின் மோட்டார்கள் சேதமாகி குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

ஜனவரி 17ஆம் தேதி முதல் மழை நின்றதையடுத்து, குடிநீர் கிணறுகள், மின் மோட்டார்களை சீரமைக்கும் பணிகள் தொடங்கின. இதனால் சில இடங்களில் மட்டும் குடிநீர் விநியோகம் சீராகியுள்ளது. மேலும், வெள்ளத்தில் மூழ்கிய மின் மோட்டர்களுக்கு பதிலாக புதிய மோட்டார்களை அமைத்தல், கிணறுகளை சீரமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்தபோதும், மின் மோட்டார்களை முழுமையாக சீரமைக்கும் பணிகள் நிறைவடையாததால் நகர் மற்றும் கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனினும், மின் மோட்டார்களை சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்ற பிறகே, திருநெல்வேலி, தூத்துக்குடி விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு சீராக குடிநீர் விநியோகிக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details