தமிழ்நாடு

tamil nadu

'தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லை' அமைச்சர் தங்கம் தென்னரசு!

தமிழ்நாடில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லை என, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

By

Published : May 31, 2021, 2:09 PM IST

Published : May 31, 2021, 2:09 PM IST

செங்கல்பட்டு தடுப்பூசி மையம்
செங்கல்பட்டு தடுப்பூசி மையம்

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்குக் கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. இன்று (மே.31) இம்முகாமில் நியாய விலைக் கடையில் பணியாற்றுவோர், பெட்ரோல் பங்கில் பணிபுரிவோருக்குத் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது.

இம்முகாமைத் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். அதனைதொடந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது, ”மாவட்டத்தில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருகிறது. இதுவரை 1.32 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது, 23 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக குறைந்துள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஒருங்கிணைந்தத் தடுப்பூசி உற்பத்தி மையம் தொடர்பாகப் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

அதுபோல, மத்தியத் தொழில் வர்த்தகத் துறை அமைச்சரை நேரடியாகச் சந்தித்து மனு அளித்துள்ளேன். பத்து நாட்களுக்குள் பதில் அளிப்பதாகத் தெரிவித்தார். அவரின் பதிலை எதிர்நோக்கி உள்ளோம்.

ஸ்டெர்லைட் ஆலையில் 2வது அலகு செயல்படத்தொடங்கினால், தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய பெரும் உதவியாக இருக்கும். இதனால் 24 மெட்ரிக் டன் ஆக்சிஜனை பெறமுடியும். மேலும் தமிழ்நாடில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லை” என்றார்.

இதையும் படிங்க:இந்தியாவில் சரிவைச் சந்தித்துவரும் கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details