திருநெல்வேலிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான கேள்வித்தாள், விடைத்தாள் வைக்கப்பட உள்ள கருவூலங்களை அதன் தலைவர் பாலச்சந்திரன் ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குரூப் 2 தேர்வுக்கு பாடத்திட்டம் தயாரிப்புப் பணி ஓரிரு தினங்களில் முடிவுபெறும். இந்த ஆண்டிற்கான குரூப் 4 தேர்வுக்கான அட்டவணை இந்த மாத மத்தியில் வெளியிடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 காலிப்பணியிடம் 5,000 இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
காலிப்பணியிடம் அதிகரிக்க வாய்ப்பு
கலந்தாய்வு முடிவு பெறும் வரை காலிப்பணியிடம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டிஎன்பிஎஸ்சி ஆணையம் சிறப்பாகச் செயல்படுகிறது. தேர்வர்களுக்கு ஆணையம் மீது நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு கேள்வித்தாள், விடைத்தாள் கொண்டு செல்லும் வாகனங்களில் கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.