நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாட்டம் பகுதியில் விவசாயம் செய்துவரும் கணேசன் என்பவர் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். வீடுகட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளநிலையில், நேற்று நள்ளிரவில் வீட்டில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தது. அதில், வீட்டின் பின்பக்கம் அறைகள் முழுவதும் சேதம் அடைந்தது.
நெல்லையில் வீட்டினுள் 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு! - நெல்லை போலிஸ்
நெல்லை: பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாட்டத்தில் நள்ளிரவில் வீடு ஒன்றில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லையில் வீட்டினுல் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரப்பரப்பு!
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் சம்பவம் இடத்திற்கு விரைந்து காவலர்கள் நடத்திய சோதனையில், வெடிக்காமல் இருந்த மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.