தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக குழந்தை தத்தெடுத்தல் விவகாரம்; திடுக்கிடும் தகவல்! - குழந்தை தத்தெடுத்தல்

நெல்லை: பிறந்து ஆறு நாளே ஆன குழந்தையை சட்டவிரோதமாக தத்தெடுத்த ராஜஸ்தான் தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

child adopt

By

Published : Aug 29, 2019, 10:09 PM IST

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கேவி ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயதில் திருமணமான இளம் பெண்ணுக்கு பிறந்த 6 நாட்களே ஆன ஆண் குழந்தையை ராஜஸ்தானைச் சேர்ந்த பாதர் வல்ராம் - கிறிஸ்டி தம்பதியினர் சேர்ந்து விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புளியங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த தனியார் மருத்துவமனை டாக்டரின் டிரைவராக வேலை பார்க்கும் கிறிஸ்டியின் அக்கா கணவர் இம்மானுவேல்தான் குழந்தையை விற்க மூளையாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குழந்தைக்கு மஞ்சள்காமாலை இருப்பதுபோல் தெரியவர, குழந்தையை வாங்கிய கிறிஸ்டி அந்த குழந்தையை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். குழந்தையின் தாய் என்று சொன்ன கிறிஸ்டியின் வயதையும், உருவத்தையும் பார்த்து சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் சுகாதாரத் துறை துணை இயக்குநரிடம் புகார் செய்துள்ளனர்.

துணை இயக்குநர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் அளிக்க உடனடியாக அதன் அலுவலர் தேவ் ஆனந்தும் அவரது குழுவினரும் தென்காசி மருத்துவமனை சென்று விசாரணையை தொடங்கினர்.

சட்டவிரோதமாக குழந்தை தத்தெடுத்தல் விவகாரம்

விசாரணையில் குழந்தையின் தாய் கிறிஸ்டி இல்லை என்பது தெரியவந்தது. மேலும் குழந்தையின் உண்மையான தாய்க்கு 16 வயதில் திருமணம் செய்து வைத்ததில் பிறந்த குழந்தைதான் கிறிஸ்டி வைத்திருந்த குழந்தை என்பது உறுதியானது.

இதையடுத்து அந்த பெண்ணை அவரது கணவர் செல்வராஜ் பிரிந்து சென்றதால் அப்பெண்ணின் எதிர்கால நன்மை கருதி குழந்தையை விற்க அப்பெண் முடிவு செய்துள்ளார். அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனது உறவினரான கிறிஸ்டி - வல்ராம் தம்பதியினருக்கு இம்மானுவேல் அந்த குழந்தையை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கபட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக குழந்தையை தத்தெடுத்தது, அந்த பெண்ணிற்கு நடந்த குழந்தைத் திருமணம், புளியங்குடி தனியார் மருத்துவமனை டாக்டர் முறையற்ற பிரசவம் பார்த்தது என இவையனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சங்கரன்கோவிலில் உள்ள மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details