நெல்லை மேற்கு மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சியில் மண்பாண்ட தொழிலாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கம் புதிய கட்டடத்தை, தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்துகொண்டு புதிய கட்டடத்தை பார்வையிட்டனர்.
'மண்பாண்ட தொழிலாளர்களின் தரம் உயர்த்த அதிமுக அரசு பாடுபடும்' - அமைச்சர் பாஸ்கரன் பேட்டி
திருநெல்வேலி: மண்பாண்ட தொழில், தொழிலாளர்களின் தரம் உயர்த்த இந்த (அதிமுக) அரசு பாடுபடும் என கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன் இலஞ்சியில் பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.
அமைச்சர் பாஸ்கரன்
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாஸ்கரன், "நலிந்துவரும் தொழிலான மண்பாண்ட தொழிலை மேம்படுத்த அரசு பலவகை முயற்சி மேற்கொண்டுவருகிறது. மண்பாண்ட தொழில் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்த அரசு கருத்தில்கொண்டு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வம் மோகன்தாஸ் பாண்டியன், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.