தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலா ஆட்சி செய்தால் நல்லாட்சி தருவாரா ? ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி - ops on sasikala

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போல் ஆட்சி செய்வேன் என சசிகலா கூறியதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார்.

ஓபிஎஸ்
"சசிகலா வந்தால் பார்க்கலாம்"

By

Published : May 13, 2022, 5:53 PM IST

நெல்லை:நெல்லை மாவட்டம் மேலச்செவல் பகுதியில் பசும்பொன் தேசிய கழகம் துணைத் தலைவர் ஆதி சுப்ரமணியன் இல்லத் திருமண விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஓராண்டை நிறைவு செய்துள்ள திமுகவின் ஆட்சியில் , மக்கள் பல சிரமங்களை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டினார். தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என கூறிய அவர் , தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெறுவதாக திமுக அரசை தாக்கி பேசினார்.

"சசிகலா வந்தால் பார்க்கலாம்"

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என தெரியாமல் விவசாயிகள் , பயிர்களுக்கு தண்ணீர் கூட பாய்ச்ச முடியாமல் வேதனையில் இருப்பதாக கூறினார். அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போல் ஆட்சி செய்வேன் என சசிகலா கூறியது தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்கு , அவர் வந்தால் பார்போம் என பதிலளித்து பேட்டியை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க:அதிமுகவைக் கைப்பற்ற யாகம் செய்தாரா சசிகலா?

ABOUT THE AUTHOR

...view details