திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக அணைகளிலிருந்து 40 ஆயிரம் கன அடி நீர், தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் - வீடுகளுக்குள் புகுந்த நீர்
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்
இதனால் நள்ளிரவு டவுன், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் விடிய விடிய கரையோரப் பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
இதையும் படிங்க:சேலம் உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை மிகுதி!