திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக இருந்த அவினாஷ்குமார் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். ஐபிஎஸ் அதிகாரி ராஜேந்திரன் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அந்த வகையில் நேற்று(ஜன.7) புதிய ஆணையராக ராஜேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது பேட்டியளித்த அவர், ‘திருநெல்வேலி மாநகரில் கஞ்சா விற்பனை ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருநெல்வேலி மாநகரில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தெரிவித்தார்.
பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்
பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என திருநெல்வேலியில் புதிய மாநகர காவல் ஆணையராக பதவியேற்ற ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘ திருநெல்வேலி மாநகரத்தில் 2022ஆம் ஆண்டு மட்டும் 393 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 87 வழக்கில் 91 நபர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததோடு அதில் 54 பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளார்கள். ஆகவே, இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் தலை கவசம் அணிய வேண்டும். குறிப்பாக பின்னால் அமர்ந்து செல்வோரும் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:முதல் முறையாக ஜார்ஜ் கோட்டைக்கு வரும் ஆளுநர் ஆர்.என். ரவி