திருநெல்வேலி மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுடன் கரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவி மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் பாதிப்பு நிலவரம் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார்.