திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்- திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திசையன்விளை அருகே மன்னார்புரத்தில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த பொன் சேகர்(43), ரெனிஸ் வில்சன் ஹெரோபின்(39), வில்சன் ரஜினி ராஜா(35) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நெல்லையில் பரிதாபம் - கார் விபத்தில் சிக்கி நண்பர்கள் உயிரிழப்பு - Friends dead in car accident
நெல்லை: திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் நண்பர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
accident
இவர்கள் மூவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த திசையன்விளை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.