திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பாபநாசம் அணை நேற்று (டிச. 18) மொத்த கொள்ளளவான 143 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேசுகையில், “தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 980 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்க வேண்டாம் என நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தபோதிலும் இன்று ஒரு சில இடங்களில் பொதுமக்கள் விதிகளை மீறுவதாக தகவல் கிடைத்துள்ளது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையோரப் பகுதி மக்களை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்வதற்கு பல்வேறு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆற்றில் அடித்துச செல்லப்பட்ட சிறுவனை மீட்பதில் தாமதம்: கிராம மக்கள் சாலை மறியல்