தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் முதல் மக்கள் குறை தீர்க்கும் முகாம்! - தென்காசியில் முதல் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

தென்காசி:மாவட்டத்தின் முதல் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மனு அளித்தனர்.

petition

By

Published : Nov 25, 2019, 11:00 PM IST

நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக தென்காசி மாவட்டம் உள்ளது. இதன், முதல் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. மாவட்டத்தின் முதல் ஆட்சியர் அருண் தயாளன், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து முதலில் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், மற்றவர்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆட்சியர் அலுவலகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும் பொதுப்பணித்துறை ஆய்வுக்குப் பிறகு கட்டடம் கட்ட தொடங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்த நிலையில், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மனுக்கள் பெறப்பட்டன.

தென்காசியில் முதல் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

இரண்டு வாரங்களில் சார் பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டு அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படும் எனத்தெரிகிறது. பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுப்பப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


இதையும் படிங்க: முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியானது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details