திருநெல்வேலி : நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் சைமன். இவர் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை மொத்தமாக சேகரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இதற்காக தச்சநல்லூர் ராமையன்பட்டி அருகே பழைய பொருள்களை சேமித்து வைக்கும் குடோன் ஒன்றும் வைத்துள்ளார். இங்கு சேமித்து வைக்கப்படும் பழைய பொருள்களை பேப்பர் தனியாக பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பிரிக்கும் பணி நடைபெறும்.
இந்நிலையில் இன்று (ஜன.28) இந்தக் குடோனில் பணி நடந்து கொண்டிருந்த போது கழிவுகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென குடோன் முழுவதும் எரிந்து கரும்புகையாக காட்சியளித்தது.