திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மாருதி நகர் பகுதியில் கால்நடை வளர்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் 10 படப்பு வைக்கோல் வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை இந்த படப்புகளில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவி அனைத்து படப்புகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடித் தீயை அணைத்தனர்.
வைக்கோல் படப்பில் தீ விபத்து - fire accident
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் வயல் பகுதியில் நேரிட்ட தீ விபத்தில் வைக்கப்பட்டு இருந்த வைக்கோல் படப்புகள் முற்றிலுமாக எரிந்து போயின.
வைக்கோல் படப்பில் தீ விபத்து
இந்த தீ விபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல் படப்புகள் எரிந்து நாசமாயின. இது குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.