தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் மேயர் கொலை வழக்கு: கார்த்திக்ராஜை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு

நெல்லை: முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் கொலை வழக்கில் கைதான கார்த்திக்ராஜை, ஐந்து நாட்கள் சிபிசிஐடி விசாரணைக்கு எடுக்க நீதிபதி பாபு உத்தரவிட்டுள்ளார்.

cbcid

By

Published : Aug 7, 2019, 7:55 PM IST

நெல்லை முன்னாள் திமுக மேயர் உமாமகேஸ்வரி உட்பட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜூலை 29ஆம் தேதி இரவு கார்த்திக்ராஜை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர். இதனையடுத்து ஜுலை 30ஆம் தேதி இரவில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நிஷாந்தினி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கார்த்திக்ராஜை ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இச்சூழலில் இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறை வசம் ஜூலை மாதம் 29ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கைதான கார்த்திக்ராஜை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர், நெல்லை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1இல் நேற்று (ஆக.8) மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை கார்த்திக் ராஜை சிபிசிஐடி விசாரணைக்கு எடுக்க நெல்லை நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்ராஜின் வழக்கறிஞர் பழனியப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கார்த்திக்ராஜை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு
’சிபிசிஐடி தரப்பில் கார்த்திக்ராஜை காவலுக்கு எடுத்து விசாரிக்க வேண்டும் என்றதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்து எல்லா ஆவணங்களையும் கைப்பற்றிய பின்பு, இனி கைப்பற்ற எதுவும் இல்லை என்பதனால் மேற்படி விசாரணை தேவையில்லை என்று கூறினோம். மேலும், எனக்கு கிடைத்த தகவல்படி காரத்திக்ராஜ் கொலை செய்ததாக ஒத்துக்கொள்ள வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கிற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details