திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி. இவர் தனது கணவருடன் அந்தப் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அவரது வீட்டில் வைத்து அவர், அவரது கணவர், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
உமாமகேஸ்வரியை கொலை செய்ய பழங்களுடன் சென்ற கார்த்திகேயன் - EX mayor
திருநெல்வேலி: முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் அவரது வீட்டிற்கு செல்லும்போது பழங்கள் வாங்கிகொண்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
home before murder
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளியான கார்த்திகேயனை கைது செய்துள்ள நிலையில், அவர் கொலை செய்வதற்கு முன்பு உமாமகேஸ்வரி வீட்டிற்கு பழங்கள் வாங்கிச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.