தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநெல்வேலி: வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்! - thirunevelli collectorshilpa prabakar sathessh

திருநெல்வேலி : மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலையில் வாக்கு இயந்திரங்களை அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணியைத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா

By

Published : Mar 29, 2019, 7:45 PM IST

நெல்லை மாவட்டத்தில், நெல்லை, தென்காசி என இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 2019 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நெல்லை ராமையன்பட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்கில் வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது, அங்கிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குகள் சரிபார்க்கும் இயந்திரங்களை (VVPAT), 10 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள அந்தந்த வாக்குச் சாவடிகளுக்குப் பிரித்து அனுப்பும் பணி துவங்கியுள்ளது.

இதற்கிடையே, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தேர்தல் பார்வையாளர் ஹர்சவர்தன் ஆகியோர் இப்பணி குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பலத்த பாதுகாப்புடன் இப்பணியானது தீவிரமாக நடைபெற்றது வருகிறது.

திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா

இதுகுறித்து ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, "மக்களவைத் தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்திற்குத் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்களும், VVPAT இயந்திரங்களும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு மொத்தம் 3 ஆயிரத்து 579 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 4 ஆயிரத்து 146 VVPAT இயந்திரங்களும் உள்ளன. இவை பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details