தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யாஸ் புயல் எதிரொலி: நெல்லையில் மிதமான மழை - Rain in Tirunelveli

யாஸ் புயல் எதிரொலி காரணமாக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

நெல்லையில் மிதமான மழை
நெல்லையில் மிதமான மழை

By

Published : May 27, 2021, 4:13 PM IST

வங்கக் கடலில் உருவாகியுள்ள ’யாஸ்’ புயல் ஒடிசாவின் பாலசோர் அருகே பாரதீப், சாகர் தீவுக்கு இடையே நேற்று (மே.26) கரையைக் கடந்தது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

குறிப்பாக வண்ணாரப்பேட்டை, நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை, கே.டி.சி.நகர், தச்சநல்லூர் ஆகிய இடங்களில் இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்தது. அதேபோல மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்ததால், குளிர்ச்சி ஏற்பட்டு இதமான வானிலை நிலவியது.

மேலும் முழு ஊரடங்கு ஒருபுறம் அமலில் இருப்பதாலும், மழை காரணமாகவும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதையும் படிங்க:குமரியில் கனமழை: விஜய் வசந்த் எம்.பி ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details