திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 25 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியதாவது, "நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் மாவட்டம் முழுவதும் 25 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ள நிலையில், வருகின்ற 19ஆம்(செவ்வாய்க்கிழமை) தேதி வரை மழை நீடிக்கக்கூடும்.
மாவட்டத்தை 5 மண்டலங்களாகப் பிரித்து வருவாய், காவல், மின்சாரம், தீயணைப்புத் துறை ஒருங்கிணைந்து செயல்பட 1 கண்காணிப்பு அதிகாரி உட்பட 4 சிறப்பு அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையில், மாவட்டம் முழுவதும் 20 முகாம்களில் 985 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 245முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.