தேர்தல் பணிக்கு மாவட்ட நிர்வாகம் தயார் - நாங்குநேரி ஆட்சியர் - ஷில்பா பிரபாகர் சதீஷ்
திருநெல்வேலி: நாங்குநேரியில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவித்தால் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியுள்ளார்.
நெல்லையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறுகையில், நெல்லையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் நாளை தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது என்றும், நெல்லை மாவட்ட வாக்காளர்கள் அவர்களது பெயர், புகைப்படம் போன்றவற்றில் உள்ள திருத்தங்களை தங்கள் கைபேசியில் ’voters helpline mobile app’ என்ற செயலியை பயன்படுத்தியும் www.NVSP.com என்ற இணையத்தை பயன்படுத்தியும் தங்கள் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.