தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்லக்கு தூக்கி போராட்டம் நடத்திய இந்து அமைப்பினர் - palanquin

தருமபுரம் ஆதீனம் விவகாரம் காரணமாக நெல்லையில் பல்லக்கு தூக்கும் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது

பல்லக்கு தூக்கும் போராட்டம்
பல்லக்கு தூக்கும் போராட்டம்

By

Published : May 9, 2022, 2:51 PM IST

திருநெல்வேலி: மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தருமபுர ஆதினத்தில் நடைபெறும் குரு பூஜையின் போது ஆதின மடாதிபதி பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மடாதிபதியை சிவபக்தர்கள் மற்றும் தொண்டர்கள் பல்லக்கில் சுமந்து செல்வது வழக்கம். இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் இயக்கங்கள் இந்து அமைப்பினர் மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் நேற்றைய தினம் தமிழக அரசு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்றது.

பல்லக்கில் வந்து மனு: இந்நிலையில் வருங்காலங்களில் ஆதினங்களில் நடைபெறும் பட்டினப்பிரவேசம் கோவில்களில் நடைபெறும் தேர்த்திருவிழா,சப்பர வீதிஉலா உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்க கூடாது என வலியுறுத்தி இந்து தேசிய கட்சியினர் தனது கட்சியை சேர்ந்த ஒருவருக்கு மடாதிபதி போல் வேடமணிந்து பல்லக்கில் அமரவைத்து அந்த பல்லக்கை சுமந்து வந்து தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் வாயிலாக நூதன முறையில் மனு அளித்தனர்.

பல்லக்கு தூக்கி போராட்டம் நடத்திய இந்து அமைப்பினர்

மத்திய மாநில அரசுகள் சமய வழிபாடுகளை தடை விதிக்கக் கூடாது எனவும் தொண்டர்களை கட்சித்தலைவர்கள் தோளில் சுமப்பது அவர்களது உரிமை அதேபோல பக்தர்கள் குருமகாசன்னிதானத்தை சுமப்பதும் அவர்களது உரிமை என வலியுறுத்தியும் கூட்டணி கட்சியினருக்காக வருங்காலங்களில் இதுபோன்ற தடை உத்தரவை மாநில அரசு பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழக முதலமைச்சருக்கு இந்து தேசிய கட்சியினர் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:ஆதீனம் விவகாரத்தில் அரசியல் செய்பவர்கள் அரசியல் செய்யட்டும் - வைகோ

ABOUT THE AUTHOR

...view details