தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகேந்திரகிரியில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் ரக என்ஜின் பரிசோதனை வெற்றி!

Cryogenic A17 engine Test: நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலைப்பகுதியில் உள்ள இஸ்ரோ மையத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் ஏ17 (Cryogenic A17) ரக என்ஜினின் பரிசோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மகேந்திரகிரியில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கான என்ஜின் பரிசோதனை வெற்றி
மகேந்திரகிரியில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கான என்ஜின் பரிசோதனை வெற்றி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 1:29 PM IST

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கப்பட்டு, பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் ஏ17 (Cryogenic A17) ரக என்ஜினின் முதல் கட்ட சோதனை 200 விநாடிகள் நடத்த இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது.

அதன்படி, இஸ்ரோ மைய இயக்குநர் ஆசீர் பாக்யராஜ் முன்னிலையில், நேற்று (டிச.13) அந்த சோதனை நடந்தது. அதில் நிர்ணயிக்கப்பட்ட 200 விநாடி இலக்கு வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பரிசோதனையின் வெற்றி, இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கிரையோஜெனிக் ரக என்ஜின்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் ஒரு மாபெரும் மைல் கல்லாக கருதப்படுகிறது. குறிப்பாக, சந்திராயன் 3, மங்கள்யான், ஆதித்யா எல் 1 போன்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வெற்றிக்கு இந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் மிக முக்கிய காரணமாகத் திகழ்கிறது.

இதையும் படிங்க:"2040க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பத் திட்டம்" - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

ABOUT THE AUTHOR

...view details