உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு பொதுமக்களை அச்சுறுத்துகிறது. இதனால், விமான சேவைகள், ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், பல நாடுகளில் பொதுமக்கள் கூடும் இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஆகையால், தமிழ்நாடு அரசு, இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மேலும் கொக்கரக்குளம் பகுதியில் உள்ள அறிவியல் கண்காட்சி காலவரையறையற்று மூடப்பட்டுள்ளது.