திருநெல்வேலி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாநகராட்சியின் சார்பில், மக்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்களில் தடுப்பு மருந்துகள் அடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகமான மக்கள் வருவார்கள் என்ற அடிப்படையில் அங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, மக்கள் அதிகம் கூடுமிடங்கள், படிக்கட்டுகளின் கைப்பிடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நோய்த் தொற்று பரவாமலிருக்க தடுப்பு மருந்துகள் அடிக்கப்படுகின்றன. இந்தப் பணிகள் மாநகராட்சி முழுவதுமுள்ள பேருந்து, ரயில் நிலையங்களில் திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இதையும் படிங்க:‘அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பது போல் மோடி நடிக்கிறார்’ - திருமாவளவன்