நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள கால்நடை சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, மாடு உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். வாரத்தில் செவ்வாய்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும்.
கடந்த ஆண்டு கரோனா பரவலைத் தொடர்ந்து 7 மாதங்கள் சந்தை மூடப்பட்டு பின்னர், ஊரடங்கின் தளர்வுக்குப் பின் மீண்டும் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் கரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில், சில விதிமுறைகளுடன் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மேலப்பாளையத்தில் இன்று (ஏப்ரல் 27) நடைபெற இருந்த கால்நடைச்சந்தை கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தற்காலிகமாக மூடப்பட்டது.
மேலப்பாளையம் கால்நடை சந்தை மூடல் மேலும், சந்தை மூடப்பட்டதற்கான அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அரசின் மறு உத்தரவு வரும் வரை கால்நடைச்சந்தை மூடியிருக்கும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பரபரப்பாக செயல்பட்டு வந்த சந்தைு மூடப்பட்டதைத் தொடர்ந்து வியாபாரிகள், விற்பனையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.