நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி இசக்கிமுத்து. இவரும் இவரது சகோதரர் சேர்மனும் நேற்று (ஆகஸ்ட்.25) திம்மராஜபுரம் பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் இசக்கிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். அதனைத் தடுக்க முயன்ற சேர்மனும் படுகாயம் அடைந்தார்.
தொடர்ந்து, அரிவாள் வெட்டில் படுகாயமடைந்து கிடந்த சேர்மனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் அனுப்பி வைத்துவிட்டு, காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் உயிரிழந்த இசக்கிமுத்துவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாளையங்கோட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:நெல்லை: குடோனில் பயங்கர தீ விபத்து